மோதல் எதிரொலி: தயாரிப்பாளரை சங்கத்தை பொறுப்பேற்ற தமிழக அரசு

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால் தற்போது சங்கத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். அதில் இருந்தே அவருக்கும் ஒரு பிரிவு தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது. சில வாரங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்திற்கு பூட்டுபோடும் அளவுக்கு அந்த மோதல் முற்றியது

இந்த நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. வணிக வரித்துறை மாவட்ட பதிவாளர் என்.சேகர் என்பவரை தயாரிப்பாளர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் உள்பட நிர்வாகிகள் யாரும் இனிமேல் சங்கத்தின் பணிகளில் தலையிட முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சேகர்தான் முடிவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது