தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி
Send us your feedback to audioarticles@vaarta.com
தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர். இதனையடுத்து மற்ற காய்கறி விவசாயம் செய்பவர்களும் தக்காளியை பயிரிட்டனர். மற்ற பயிர்களை போல் தக்காளிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்பதும், தக்காளியை மூன்றே மாதத்தில் அறுவடை செய்து விடலாம் என்பதும் தக்காளியை அதிக விவசாயிகள் பயிரட ஒரு காரணமாகவும் உள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக வரத்து அதிகமானதை அடுத்து தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.20 என விற்பனையான தக்காளி தற்போது ரூ.2க்கு விற்பனையாகிறது. பறிக்கும் கூலி, போக்குவரத்து செலவு கூட தேறாததால் பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பறவைகளுக்கு இரையாகவும், அழுகியும் போயுள்ளது தக்காளி.
இந்த நிலையில் ஒரு விவசாயி ஒருவர் டிராக்டரில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் அவற்றை ஏரியில் கொட்டும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. பார்த்து பார்த்து விவசாயம் செய்த தக்காளியை அந்த விவசாயி ஏரியில் கொட்டும்போது அவருடைய கண்கள் கண்ணீரால் சிவப்படைகிறது. அதைபோலவே தக்காளி கொட்டப்பட்டதால் ஏரியும் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கின்றது.
தக்காளி விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற காலங்களில் தக்காளியை கெட்டுப்போகாமல் பதப்படுத்தி வைக்கும் வசதியை அரசு செய்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout