தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

  • IndiaGlitz, [Thursday,March 01 2018]

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர். இதனையடுத்து மற்ற காய்கறி விவசாயம் செய்பவர்களும் தக்காளியை பயிரிட்டனர்.  மற்ற பயிர்களை போல் தக்காளிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்பதும், தக்காளியை மூன்றே மாதத்தில் அறுவடை செய்து விடலாம் என்பதும் தக்காளியை அதிக விவசாயிகள் பயிரட ஒரு காரணமாகவும் உள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக வரத்து அதிகமானதை அடுத்து தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.20 என விற்பனையான தக்காளி தற்போது ரூ.2க்கு விற்பனையாகிறது. பறிக்கும் கூலி, போக்குவரத்து செலவு கூட தேறாததால் பல விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பறவைகளுக்கு இரையாகவும், அழுகியும் போயுள்ளது தக்காளி.

இந்த நிலையில் ஒரு விவசாயி ஒருவர் டிராக்டரில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த தக்காளிக்கு சரியான விலை கிடைக்காததால் அவற்றை ஏரியில் கொட்டும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. பார்த்து பார்த்து விவசாயம் செய்த தக்காளியை அந்த விவசாயி ஏரியில் கொட்டும்போது அவருடைய கண்கள் கண்ணீரால் சிவப்படைகிறது. அதைபோலவே  தக்காளி கொட்டப்பட்டதால் ஏரியும் சிவப்பு நிறமாக காட்சி அளிக்கின்றது.

தக்காளி விவசாயிகளுக்கு உதவும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற காலங்களில் தக்காளியை கெட்டுப்போகாமல் பதப்படுத்தி வைக்கும் வசதியை அரசு செய்து தரவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

'விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த 'தூங்காவனம்' படத்திற்கு பின்னர் வேறு படங்கள் வெளியாகாததால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

இரண்டாம் பாக வெற்றி பயணத்தில் இன்றுமுதல் சந்தானம்

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம் 'தில்லுக்கு துட்டு' இந்த படம் ஹிட்டாகிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.

ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணையும் இளம் இசைப்புயல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.

பிரித்து மேய்ந்துவிட்டார்! 'காலா' இசையமைப்பாளர் குறிப்பிடுவது யாரை?

'காலா' படத்திற்காக பிரபல பாடகர் யோகி பி அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி.

வடிவேலுவை வழிக்கு கொண்டு வர ஷங்கர் செய்த அதிரடி

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகிய 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அதே வடிவேலு, சிம்புதேவன் கூட்டணியில் தயாரிக்க ஷங்கர் முடிவு செய்தார்.