தேர்தல் துளிகள்: 24 மார்ச் 2021
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா காலத்தில் 7.5கி எடையைக் குறைத்தேன்… விஜயபாஸ்கர் உருக்கம்!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு உட்பட்ட இலுப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இயேசு நாதர் சிலுவையை சுமந்ததுபோல் விராலிமலை தொகுதியை சுமந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக விராலிமலை தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளேன். கொரோனா காலத்தில் 24 மணி நேரமும் பணியாற்றியதால் எனது உடல்எடை 7.5கிலோ வரை குறைந்தள்ளது.
எனக்கும் உடலில் குறைபாடு உள்ளது. இருந்தாலும் நான் எடுத்துக்கொண்ட பொறுப்பை சரியாக செய்யவேண்டும் என்ற வெறி மனதில் உள்ளது. எனக்கு 24 மணி நேரமும் உழைக்கத் தெரியும். கஷ்டப்பட தெரியும். நல்ல பல திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க தெரியும். எனது கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை இந்த தொகுதிக்கு உழைத்துக் கொண்டே இருப்பேன். 10 ஆண்டுகளில் விராலிமலை தொகுதியை மாற்றியுள்ளேன் எனப் பேசினார்.
இபிஎஸ் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை- கனிமொழி பிரச்சாரம்!
திமுக மாநில மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் க.சொ.க.கண்ணனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கான கூட்டத்தில் பேசிய கனிமொழி அதிமுக அரசு விவசாயத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை முதலில் ஆதரித்தது. தற்போது தேர்தல் வந்ததால் மக்களை முட்டாளாக்குகிறார். மேலும் வேளாண் சட்டத்தில் மூன்றில் இரண்டை தற்போது எதிர்க்கிறார்கள்.
இந்த ஆட்சியில் ஏரி, குளம் நிரம்பி வழிவதாகக் கூறும் அவர்களின் கூற்று பொய்யாகவே இருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. தான் விவசாயி என்று கூறும் முதல்வர் விவசாயிகளுக்கு எந்த நலனும் செய்ததில்லை. தேர்தல் வந்ததால் தற்போது விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளார் என எதிர்க்கட்சியை விமர்சித்து எம்.பி. கனிமொழி பேசினார்.
இலங்கை தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது குறித்து வானதி சீனிவாசன் விளக்கம்!
இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை கோரும் தீர்மானம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அரசு கொண்டு வந்தது. இந்தத் தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் இந்தியா இந்த தீர்மானத்துக்கு வாக்களிக்கவில்லை. இது அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
இந்த விவாகாரம் குறித்து விளக்கம் அளித்து இருக்கும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்கள், ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து இருப்பது அரசியல் ரீதியான நடவடிக்கை. அண்டை நாடுகள் உறவை பேணும் வகையிலும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கைத் தமிழர்களின் நலனில், உரிமையில் இந்தியா சமரசம் செய்து கொள்ளாது என விளக்கம் அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout