தேர்தல் துளிகள்: 15 மார்ச் 2021
Send us your feedback to audioarticles@vaarta.com
அமமுக கூட்டணியில் தேமுதிக-60 இடங்களில் போட்டி!
கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. அதன்படி வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 சீட்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் நேற்று தேமுதிக தலைமை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் இத்தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் நடிகர் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அவருக்குப் பதிலாக விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுகிறார். அதோடு விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதியும் போட்யிட இருக்கிறார். அதோடு எல்.கே.சுதிஷ், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமமுக மெகா கூட்டணி முழு தகவல்!
அமமுக வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு தேமுதிக (60), ஹைத்ராபாத் எம்.பி. அகில இந்திய மஜ்லிஸ் இ-இத்தாதுல் முஸ்லீமின் (ஏஐஎம்ஐஎம்)(3), கோகுல மக்கள் கட்சி(1), மருது சேனை சங்கம்(1), விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி(1), மக்களரசு கட்சி(1), எஸ்டிபிஐ(6) ஆகிய கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. முன்னதாக அமமுக வெளியிட்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் அறிக்கையில் 195 பேர் நேரடியாக அக்கட்சியில் இருந்து போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்குத் தற்போது சீட் ஒதுக்கி உள்ள நிலையில் அமமுக வேட்பாளர்களைத் திரும்ப பெறும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
திமுக கூட்டணியில் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டு, தன்னுடைய கட்சி சின்னத்திலேயே போட்டியிடுகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. நாகை-ஆளுர் ஷா நவாஸ், காட்டுமன்னார் கோயில்- சிந்தனை செல்வன், செய்யூர்- பனையூர் பாபு, வானூர்- வன்னி அரசு, திருப்போரூர்- எஸ்.எஸ். பாலாஜி, அரக்கோணம்-கவுதம சன்னா ஆகியோர் போட்டியிட இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. திருத்துறைப் பூண்டி (தனி)- மாரிமுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி- டி.ராமச்சந்திரன், பவானிசாகர்- பில்.எல்.சுந்தரம், திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியன், வால்பாறை- எம்.ஆறுமுகம், சிவகங்கை- குணசேகரன் ஆகியோர் போட்டி என அறிவித்துள்ளது.
பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.கவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் முதற்கட்டமாக 17 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை நேற்று பா.ஜ.க. தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.
தாராபுரம்(தனி)- எல்.முருகன், காரைக்குடி-எச்.ராஜா, ஆயிரம் விளக்கு தொகுதி-குஷ்பூ, அரவக்குறிச்சி- அண்ணாமலை, கோயம்புத்தூர் தெற்கு– வானதி ஸ்ரீனிவாசன், நாகர்கோயில்-எம்.ஆர்.காந்தி, துறைமுகம்-வினோஜ் செல்வம், திருவண்ணாமலை- தணிகைவேல், திருக்கோவிலூர்- கலிவரதன், மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி, திருவையாறு- பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு– சரவணன், விருதுநகர்- பாண்டுரங்கன், ராமநாதபுரம்- குப்புராம், திருநெல்வேலி-நயினார் நாகேந்திரன், குளைச்சல்-ரமேஷ், திட்டக்குடி-டி.பெரியசாமி
கட்சி தாவிய திமுக எம்எல்ஏவிற்கு பாஜகவில் சீட்!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தவர் சரவணன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நிற்க சீட் கேட்டு இருந்தார். இத்தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளதால் நேற்று மதியம் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்த எல்.முருகனைச் சந்தித்த சரவணன் பா.ஜ.கவில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஒரு சில மணிநேரத்தில்லேயே அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com