தேர்தல் துளிகள்: 12 மார்ச் 2021
Send us your feedback to audioarticles@vaarta.com
173 திமுக தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!
கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகளை ஒதுக்கிவிட்ட திமுக நேரடியாக 173 இடங்களில் போட்டியிட இருக்கிறது. இதற்கான வேட்பாளர் பெயர் பட்டியலை அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அதில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் நிற்கிறார். சேப்பாக்கம் தொகுதியில் நிற்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலி நிற்கிறார்.
மேலும் இதில் முக்கிய வேட்பாளர்களான எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுகவின் சம்பத்குமாரும், துணை முதல்வர் ஓபிஎஸை எதிர்த்து தங்கத்தமிழ் செல்வனும் களம் இறங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக மெகா கூட்டணி குறித்த முழு விவரம்!
தமிழகச் சட்டப்பேரவை தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ள அதிமுக இதுவரை பாஜகவிற்கு 20 தொகுதிகளையும், பமகவிற்கு 23 தொகுதிகளையும் தமிழ் மாநில காங்கிரஸ்க்கு 6 தொகுதிகளையும் ஒதுக்கி உள்ளது. மேலும் சிறிய கட்சிகளான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்-1 (எழும்பூர்), பெருந்தலைவர் மக்கள் கட்சி-1 (பெரம்பலூர்), புரட்சி பாரதம் கட்சி-1 (கே.வி.குப்பம்), மூவேந்தர் முன்னேற்றக் கழகம்-1(கும்பகோணம்) போன்ற இடங்களில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளன
முதற்கட்ட 6 அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் தலைமை தொடர்ந்து 171 போட்டியாளர்கள் போட்டியிடும் இடங்களுக்கான பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனால் அதிமுக நேரடியாக 177 இடங்களில் போட்டியிட உள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் குறித்த முழு விவரம்!
1. காங்கிரஸ் - 25
2.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -6
3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-6
4.மதிமுக-6
5..விடுதலை சிறுத்தைகள் கட்சி-6
6.இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-3
7.மனிதநேய மக்கள் கட்சி-2
8.கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி -3
9. மக்கள் விடுதலை கட்சி - 1
10. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி-1
11. தமிழக வாழ்வுரிமை கட்சி -1
12. ஆதிதமிழர் பேரவை-1
திமுக ஒதுக்கிய கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் மொத்தம்- 61. திமுக நேரடியாக போட்டியிட இருக்கும் தொகுதிகள்-173. கூட்டணி கட்சிகளில் தேசிய கட்சிகள் மற்றும் விசிக தவிர மற்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. அவற்றையும் சேர்த்து உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் எண்ணிக்கை-187. திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இறுதியாக திமுக போட்டியிடும் இடங்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout