தேர்தல் துளிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் 4 ஆவது கூட்டணி!
அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக-காங்கிரஸ்-மதிமுக-விசிக-காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி, மநீம-சமத்துவக் கட்சி-ஐஜேக கூட்டணியை அடுத்து தமிழகத்தில் அடுத்து 4 ஆவது கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகிய தேமுதிக, சசிகலாவின் ஆதரவோடு கட்சி தொடங்கிய டிடிவி தினகரனுடன் பேச்சு வாத்தை நடத்தி வருகிறார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓட்டலில் இரு கட்சிகளுக்கும் இந்தப் பேச்சு வார்த்தையில் பங்கு பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அமமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அமமுக கட்சி தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் 15 முக்கிய வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகள் எதுவென அறிவிக்கப் பட்டு உள்ளன. ராசிபுரம்- திரு.எஸ்.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி –திரு.பி.பழனியப்பன், பாபநாசம் – திரு.எம்.ரெங்கசாமி, சைதாப்பேட்டை-திரு.ஜி.செந்தமிழன், ஸ்ரீரங்கம்- திரு.ஆர்.மனோகரன், மடத்துக்குளம்-திரு.சி. சண்முகவேலு, திருப்பத்தூர் (சிவகங்கை) –திரு.கே.கே.உமாதேவன், சோளிங்கர்-திரு.என்.ஜி.பார்த்திபன், வீரபாண்டி-வீரபாண்டி திரு.எஸ்.கே.செல்வம், உசிலம்பட்டி-திரு.ஐ.மகேந்திரன், கோவை தெற்கு- திரு-ஆர்.துரைசாமி (எ) சாலஞ்சர்துரை, அரூர்-திரு.ஆர்.ஆர்.முருகன், பொள்ளாச்சி-திரு.கே.சுகுமார், தருமபுரி-டி.கே.ராஜேந்திரன், புவனகிரி-திரு.கே.எஸ்.கே.பாலமுருகன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
திமுக கூட்டணியில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி!
திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி உசிலம்பட்டியில் உதயசூரியன் சின்னத்தில் பி.வி.கதிரவன் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்துவிட்ட திமுக தற்போது 173 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே 6 தொகுதி வேட்பாளர்களுக்கான வேட்பாளர் பட்டியல் முதற்கட்டமாக வெளியிடப்பட்ட நிலையில் 171 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் அதிமுக போட்டியிட இருக்கும் 177 தொகுதிகளுக்குமான பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பா.ம.க போட்டியிடும் 15 தொகுதிகள் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.கவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பா.ம.க போட்டியிட இருக்கும் 15 தொகுதிகள் எதுவென உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதில் செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிபூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூவிருந்தவல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் ஆகிய தொகுதிகள் பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிப்பு!
அதிமுக கூட்டணியில் பங்கு வகிக்கும் தேசிய கட்சியான பா.ஜ.கவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அதிமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் பா.ஜ.கவிற்கான தொகுதிகள் எவை என்பது தெரியவந்துள்ளது.
அதில், திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகை, நெல்லை, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் பா.ஜ.கவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout