அஜித் திரைப்படத்தை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தேர்தல் ஆணையம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை அடுத்து அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வலியுறுத்தி வருகின்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக பிரபல நடிகர்கள் இந்த விளம்பரத்தில் தோன்றி வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் டுவிட்டர் பக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'விஸ்வாசம்' படத்தை பயன்படுத்தி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் "வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இருந்து 49P என்ற பிரிவை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்தது என்பதை பார்த்தோம். எனவே வரும் தேர்தலின் விளம்பரத்தில் தல, தளபதி ஆகிய இருவரது படங்களும் பங்களிப்பு செய்துள்ளது என்பது இருதரப்பு ரசிகர்களுக்கும் பெருமையான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments