தேர்தல் அதிகாரி டுவீட்டை மேற்கோள் காட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'சர்கார்' திரைப்படம் வெளியானவுடன் தான் 49P என்பதே பொதுமக்களில் பலருக்கு தெரிய வந்தது. ஒருவருடைய வாக்கை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டாலும் 49P விதியை பயன்படுத்தி வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இந்த விழிப்புணர்வு 'சர்கார்' திரைப்படம் வெளியான பின்னரே அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையரின் டுவிட்டர் பக்கத்தில் ஒரு 49P குறித்து ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 'உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த டுவீட்டை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் மேற்கோள் காட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய விழிப்புணர்வை ஒரு வருடத்திற்கு முன் 'சர்கார்' படக்குழுவினர் செய்துள்ளது அந்த படக்குழுவினர்களுக்கு பெருமையான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.
— A.R.Murugadoss (@ARMurugadoss) April 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments