தேர்தல் துளிகள்: 19 மார்ச் 2021

  • IndiaGlitz, [Friday,March 19 2021]

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று மதியம் 3 மணியுடன் இந்த வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 234 சட்டப் பேரவைத் தொதிகளிலும் போட்டியிட 4,500 க்கும் பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கன்னியாகுமரி மக்களைத் தொகுதியில் போட்டியிட 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை-சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக மீது புகார்!

சென்னை-சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரி நாகநாதன் சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கான விசாரணையில் களிமண்புரம் எனும் இடத்தில் அதிமுக பணப்பட்டுவாடா நடத்தியதாகவும் அதிகாரிகள் சார்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பின்பற்றிய ராகுல் காந்தி!

அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 தரப்படும் என ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அசாமில் காங்கிரஸ் கட்சி ஆட்சி வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆளுநர் பதவியை நியமனம் செய்தல், பெண்களுக்கு பாராளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு, 60 வயதை கடந்த விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அனைத்து முதியோருக்கும் முதியோர் ஓய்வூதியம் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஏற்பாடு, தமிழகத்தில் படிப்படியாக மதுக் கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமலாக்க வலியுறுத்துதல் போன்றவற்றை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

ஓலைக் குடிசையில் வாழும் எம்எல்ஏ வேட்பாளர்!

திமுக கூட்டணியுடன் தேர்தல் களம் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறார். காரணம் அவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணியாற்றி வரும் இவர் இதுவரை ஓலை குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார்.

மேலும் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் இவர் தன்னுடைய வேட்புமனுவில் தன்னுடைய வீட்டின் சொத்து மதிப்பு 75 சென்ட் அதாவது ரூ.1.75 லட்சம் மற்றும் வங்கி கணக்கில் ரூ.58,156, மனைவியின் வங்கி கணக்கில் ரூ.3,304 இருப்பு உள்ளது என்றும் மனைவி மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்

More News

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர் இந்த ஹீரோவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்கு சீசன்களும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

ஒரு நாளைக்கு 10 பிரச்சாரக் கூட்டம்… ரவுண்டி கட்டி கலக்கும் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீவிரத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

நடைபாதை வியாபாரிகள் முதல்… அதிமுக தேர்தல் அறிக்கையை பாராட்டி வருவதாகக் கருத்து!

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பிரபல இசையமைப்பாளர்!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 1000 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டனர்

சர்வதேச வீராங்கனைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்ற திருச்சி பெண்... குவியும் பாராட்டு!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15 ஆம் தேதி முதல் தேசிய தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.