தேர்தல் துளிகள்: 18 மார்ச் 2021

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

பெருந்துறை அதிமுக எம்எல்ஏ சுயேட்சையாக போட்டியிட முடிவு!

பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்று கடந்த 2011, 2016 என இருமுறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் தோப்பு வெங்கடாசலம். இவர் ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் வருகிற 2021 தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை இவருக்கு வாய்ப்பு மறுத்து இருக்கிறது. இதனால் சுயேட்சையாக போட்டியிடப் போகிறேன் என அறிவித்து உள்ளார். மேலும் தனது தொகுதி மக்களுக்கு செய்துள்ள திட்டப் பணிகளை அடிப்படையாக வைத்தே இந்த முடிவிற்கு வந்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

அருப்புக்கோட்டை அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அருப்புக் கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதும் ஒரு விதியாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வைகைச் செல்வம் நேற்று பொம்மையாபுரம் கிராமத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பத்தரை மணி வரையிலும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எழுந்த புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் அசத்தும் தேர்தல் அறிவிப்பு!

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், மநீக கட்சி ஆட்சிக்கு வந்தால் 50% டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஈரோடு கருங்கல்பாளையம் அருகே நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய அவர், மநீக திட்டங்களைப் பற்றி கேலி பேசியவர்கள் இப்போது அதை தங்களுக்கு ஏற்றாற்போல மாற்றி அறிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கூட்டணியில் இருந்து கொண்டே நடிகை குஷ்புவை விமர்சித்த பாமக வேட்பாளர்!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் களம் இறங்கியுள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இவரை எதிர்த்து அத்தொகுதியில் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளரான உதயநிதியை விமர்சிப்பதாக நினைத்து, பக்கத்து தொகுதி வேட்பாளரான நடிகை குஷ்புவையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார் கஸ்ஸாலி.

இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தான் செல்லும் பகுதிகளுக்கு உதயநிதியால் வர இயலாது. தான் வென்றால் தொகுதியில் மக்களோடு மக்களாக இருப்பேன் என்றும் நடிகரான உதயநிதி, குஷ்பு போன்றவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா சூட்டிங் சென்று விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் பாமக வேட்பாளரே இப்படி கூறியிருப்பது நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

கவுண்டமணி அம்மாவை நேரில் சந்தித்த தளபதி விஜய்! வைரல் புகைப்படம்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் அம்மாவை தளபதி விஜய் படப்பிடிப்பின்போது நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது 

என்னுடைய சொத்துமதிப்பு ரூ.200 கோடியை தாண்டி வேற லெவலில் போயிருக்கும். ஆனால்... கமல்ஹாசன்!

அரசியலில் பல ஆண்டுகாலம் இருந்து முக்கிய பதவிகள் வகித்தவர் கூட தங்களுடைய சொத்து மதிப்பு 20 கோடி முதல் 30 கோடி வரை தான் காட்டி இருக்கும் நிலையில் முதன்முதலாக அரசியல் களத்தில் இறங்கி

மகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்த ஷகிலா!

நடிகை ஷகிலா மலையாளத் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார் என்பதும் அவருடைய திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்கள் வெளியானால் கூட தோல்வி

இவர்கள் தான் உயர்வானவர்கள்: ஆரியே விரும்பி எடுத்து கொண்ட புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னரான ஆரி, அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் ரசிகர்களை நேரில் சந்தித்து நன்றி கூறினார் என்பதும் தெரிந்ததே

மிஸ் திருநங்கை 2021 போட்டியில் சாதனை படைத்த முதல் இந்தியத் திருநங்கை…குவியும் பாராட்டு!

மூன்றாம் பாலினமான திருநங்கைகள் உலகம் முழுவதும் தங்களுக்கு உரிய மதிப்பு மற்றும் சம வாய்ப்புகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.