தேர்தல் துளிகள்: 17 மார்ச் 2021

 

 

 

 

 

விஜயபாஸ்கருக்காக ஓட்டுக் கேட்ட தமிழக முதல்வர்!

கொரோனா பரவல் நேரத்தில் தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் ஊடகங்களில் தோன்றுவதை முதல்வர் விரும்பவில்லை என்றும் அடுத்து வரும் தேர்தலில் விஜயபாஸ்கரின் நிலைமை கேள்விகுறிதான் என்றும் பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. இத்தகைய தகவல்கள் தற்போது வெறும் வதந்தி என்பது நிரூபணம் ஆகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்படுகிறது.

காரணம் நேற்று விராலி மலை தொகுதி வேட்பாளர் விஜயபாஸ்கருக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழகத்தில் விஜயபாஸ்கர் கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார். நோயாளிகள் மனசு குளிரும்படி செயல்பட்டவர். நேடியாக நோயாளிகளைச் சந்தித்து சிகிச்சையில் உடன் இருந்து அன்பாக பார்த்துக் கொண்டார். எல்லோரும் பாராட்டும் வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என பாராட்டியபோது கூடவே விஜயபாஸ்கரும் சிரித்த சம்பவம் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கருத்துமோதல் இருப்பதாக கூறப்பட்ட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு!

நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நத்தம் தொகுதிக்குட்பட்ட காட்டுவேலம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த  புகாரில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நத்தம் விஸ்வநாதன் மீது குற்றப்பிரிவு 171 E இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிடவில்லை!

புதுச்சேரி மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பா.ஜ.க(9)-என்.ஆர் காங்கிரஸ்(16)- அதிமுக(5)  கூட்டணி ஒரு பக்கமும், திமுக(13)-காங்கிரஸ்(15)-விசிக(1)-இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி(1) மற்றொரு பக்கமும் போட்டியிடுகின்றன. மேலும் பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுடைய வேட்பாளர் பட்டியலை தற்போது வெளியிட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் வெற்றிப்பெற்று கடந்த முறை ஆட்சியமைத்த முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிட வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் காங்கிரஸில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்வும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அதோடு இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடாத என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பா.ஜ.கவின் அடுத்த 3 வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக கூட்டணியில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்த அக்கட்சி தற்போது மீதமுள்ள 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் தளி-நாகேஷ்குமார், உதகை-போஜராஜன், விளவங்கோடு-ஆர்.ஜெயசீலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

 

More News

15 வருடங்களுக்கு முன் அஜித்துடன் நடித்த நடிகையின் பிகினி புகைப்படம் வைரல்!

15 ஆண்டுகளுக்கு முன்பு அஜீத்துடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் பிகினி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 

அனுஷ்கா ஷெட்டியை முத்தமிடும் அந்த இருவர் யார்? வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷெட்டியை ஒரே நேரத்தில் இருவர் முத்தமிடும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

சினிமாவில் வில்லன் ஆனாலும் எங்கள் ஹீரோ நீங்கள் தான்: ஜேம்ஸ்பாண்ட் நடிகர் மறைவுக்கு 3வது மனைவி உருக்கம்!

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்த நடிகர் யாபெட் கோட்டோ என்பவர் காலமானார். அவருக்கு வயது 81 

தமிழகத்தில் மீண்டும் லாக் டவுனா? சுகாதாரத்துறை செயலாளர் அளித்த பதில்!

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 897 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 7 ஆவது நாளாக 20 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் மக்கள் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் நீங்கி இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி இருந்தனர்.