தமிழகம் வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு: பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தையும் ஆரம்பித்தார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்றைய் பொதுக்கூட்டத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், இனி எம்ஜிஆர் ரயில் நிலையம் என்று மாற்றிய பிரதமர் மோடி, இனிமேல் சென்னை உள்பட தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் குறித்த அறிவிப்பு தமிழிலும் அறிவிப்பு செய்யப்படும் என்று அறிவித்தார்.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இனி விமான நிலையத்திற்கு சென்றால் எந்தவித பிரச்சனையும் இருக்காது.

மேலும் ஈழத் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உலகத்தில் எந்த மூளையில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மத்திய அரசு சென்று உதவி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
 

More News

சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா?

அஜித் நடித்த 'வேதாளம்', 'விவேகம்' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இயக்கிய இயக்குனர் சிவா இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது

எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பாஜக எம்பி: பெரும் பரபரப்பு

மாற்று கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்வதும், சிலசமயம் கைகலப்பில் ஈடுபடுவதும் இந்திய அரசியலுக்கு புதியது அல்ல

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு விஷால் நடித்த 'இரும்புத்திரை' மற்றும் 'சண்டக்கோழி 2' ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கு வந்து போவதால் 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் ரயில் நிலையங்களில் ஒன்று

ரீஎண்ட்ரி படத்தில் லைலாவின் வித்தியாசமான கேரக்டர்

அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை லைலா நீண்ட இடைவெளிக்கு பின் 'அலிசா' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்