அசாதாரன சூழலை சந்திக்க ஆயூத்தமாக இருங்கள். டிஜிபி உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. ஆட்சிக்கு எந்த நேரத்திலும் எந்த ரூபத்திலாவது ஆபத்து வரும் சூழ்நிலையே ஒவ்வொரு நாளும் உள்ளது.

இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பியுள்ளார். 

இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென டிஐஜி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த உத்தரவில் தமிழகம் முழுவதும் சிறப்பு காவல்படை தயார் நிலையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். 

அசாதாரன சூழலை சந்திக்க ஆயூத்தமாக இருக்குமாறு சிறப்பு காவல்படைக்கு டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுவதால், அந்த அசாதரண சூழ்நிலை என்னவாக இருக்கும் என்பது குறித்த பயம் கலந்த அதிர்ச்சி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.