துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் ஆசி பெற்ற நட்சத்திர தம்பதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் திருமணம் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த திருமணத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமின்றி அமைச்சர் ஜெயக்குமார், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த நிலையில் ஆதவ் கண்ணதாசன் - வினோதினி நட்சத்திர தம்பதிகள் இன்று துணைமுதல்வர் ஓ,.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்கு சென்று ஆசி பெற்றனர். மணமக்களை துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் விபூதி பூசி ஆசிர்வதித்தார்.
பின்னர் துணை முதல்வரின் குடும்பத்தினர்களுடன் ஆதவ் கண்ணதாசன் - வினோதினி ஜோடி புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments