மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர், சோகத்தில் ஆழ்த்திவிட்டார்: விவேக் மறைவு குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கங்களில் அவருடைய நினைவலைகளை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன்னர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.

திரு.விவேக் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

More News

விவேக் விட்டு சென்ற பணிகளை தொடர முயற்சிப்பேன்: ராகவா லாரன்ஸ்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு

விவேக் மறைவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி நேரில் அஞ்சலி!

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும், அவருக்காக சமூக வலைதளங்கள் மூலம் கண்ணீர் அஞ்சலியை திரையுலக பிரபலங்கள் செலுத்தி வருகின்றனர்

தமிழ் சினிமாவில் 25 வருடம் கோலோச்சிய சின்னக் கலைவாணர் விவேக்… சாதித்தது என்ன?

தன்னுடைய காமெடியால் போகிறப் போக்கில் சமூகக் கருத்துக்களை அள்ளித் தெளிவித்து விட்டுச் செல்ல கூடியவர் நடிகர் விவேக்.

விவேக் இறப்பிற்கு மருத்துவர்கள் தெரிவித்த காரணம்!

சின்ன கலைவாணர் என திரையுலகினர்கள், ரசிகர்களால் போற்றப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தது திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் கோலிவுட் பிரபலங்கள்

பிரபல காமெடி நடிகர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவர் காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன