தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கொரோனா வைரஸால் சென்னையில் 5 பேர்களும், கோவையில் ஒருவரும், ஈரோடு பகுதியில் இருவரும் நெல்லையில் ஒருவரும் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மாலை வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக இருந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் கலிபோர்னியாவிலிருந்து வந்தவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், துபாயிலிருந்து வந்தவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது