கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்
- IndiaGlitz, [Sunday,February 10 2019]
கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் கமல் கட்சி இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதூ.
ஆனால் அதே நேரத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி கலந்து கொண்டபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமால் கமல்ஹாசன் தவிர்த்தார். மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய காங்கிரஸ் முடிவெடுத்ததும் கமல் கட்சி அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கமல் கூறியபோது, 'திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எங்கள் கைகளை கறைப்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில் வாகை சந்திரசேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து கூறியபோது, 'அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்; எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும் என்று கூறினார்.