திரையரங்குகள் திறக்க அனுமதியா? நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!
- IndiaGlitz, [Thursday,July 29 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அதன் பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் தளர்வுகளும் அதிகரித்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் கல்லூரிகள் திரையரங்குகள் தவிர கிட்டத்தட்ட அனைத்தும் திறக்கப்பட்டன என்பதும் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இருப்பினும் திரையரங்குகளை திறக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்திகளின்படி தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்ய உள்ளார். ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல்வர் கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் என்றும், நாளைய ஆலோசனையில் திரையரங்குகள் திறப்பது குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்றும், கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என்றும் தெரிகிறது.