ஓப்பனா வரவு கணக்கு சொன்ன முதல்வர்… நன்கொடை விஷயத்தில் குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பீதியைக் கிளப்புகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2.63 லட்சம் எனும் அளவிற்கு குறைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. மேலும் ஆக்சிஜன், படுக்கை, ரெம்டெசிவிர் எனப் பல்வேறு பற்றாக்குறைகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.
இந்தப் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு பொது மக்கள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்தத் தொகை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கணக்குகளை ஒப்படைக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார். இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் முதற்கொண்டு பலரும் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்கி வந்தனர்.
அந்த வகையில் நேற்று வரை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17 வரை இணைய வழியாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில் இருந்து முதற்கட்டமாகக் கொரோனா சிகிச்சைக்கு ரூ.50 கோடி நிதியைப் பயன்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயிலில் கொண்டு வரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நிவாரண நிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் எந்த துறைக்கு எவ்வளவு செலவு என்பது குறித்தும் தெரிவித்து உள்ளார். இதனால் முதல்வருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout