ஓப்பனா வரவு கணக்கு சொன்ன முதல்வர்… நன்கொடை விஷயத்தில் குவியும் பாராட்டு!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பீதியைக் கிளப்புகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பதிவாகி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2.63 லட்சம் எனும் அளவிற்கு குறைந்து உள்ளது. ஆனால் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. மேலும் ஆக்சிஜன், படுக்கை, ரெம்டெசிவிர் எனப் பல்வேறு பற்றாக்குறைகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.

இந்தப் பாதிப்புகளில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு பொது மக்கள் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அந்தத் தொகை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கணக்குகளை ஒப்படைக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து இருந்தார். இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் முதற்கொண்டு பலரும் முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடைகளை வழங்கி வந்தனர்.

அந்த வகையில் நேற்று வரை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு வந்துள்ள தொகை குறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மே 17 வரை இணைய வழியாக ரூ.29.44 கோடி, நேரடியாக ரூ.39.56 கோடி என மொத்தம் ரூ.69 கோடி நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில் இருந்து முதற்கட்டமாகக் கொரோனா சிகிச்சைக்கு ரூ.50 கோடி நிதியைப் பயன்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயிலில் கொண்டு வரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நிவாரண நிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் எந்த துறைக்கு எவ்வளவு செலவு என்பது குறித்தும் தெரிவித்து உள்ளார். இதனால் முதல்வருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி? விளக்க முறை!

கொரோனா வைரஸ் தொற்று முதலில் மனித நுரையீரலில் பாதிப்பை  ஏற்படுத்துகிறது.

அனைவரும் தடுப்பூசி போட சீனுராமசாமி, குஷ்பு தெரிவித்த ஆலோசனைகள்!

தடுப்பூசி போட்டால் சன்மானம் தரவேண்டும் என இயக்குனர் சீனுராமசாமி கூறியிருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என குஷ்பு தெரிவித்து இருப்பது

விஜயகாந்த் உடல்நலம் குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை குறித்து தேமுதிக தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது 

மருத்துவர் கூறியபடியே மீண்டும் பொலிவான ரைசா முகம்: மன்னிப்பு கேட்பாரா?

சமீபத்தில் அழகுகளை மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சை காரணமாக தனது முகம் வீங்கி விட்டதாகவும் அதற்காக ஒரு கோடி ரூபாய் மருத்துவர் தனக்கு நஷ்ட ஈடு அவர் கொடுக்க வேண்டும்

ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட விக்னேஷ் சிவன் -  நயன்தாரா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு மத்திய மாநில அரசுகளால் ஏற்படுத்தி வருகிறது