ரஜினி மகள் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

  • IndiaGlitz, [Monday,February 11 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா திருமணம் இன்று காலை லீலா பேலஸில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செளந்தர்யா-விசாகன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் தமிழக அமைச்சர்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

முதல்வர் மற்றும் முக்கிய பிரபலங்களின் வருகையை முன்னிட்டு லீலா பேலஸ் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

More News

ரஜினியின் அடுத்த படத்தில் 'தளபதி -துப்பாக்கி' கனெக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

அருண்விஜய்யின் 'பாக்சர்' படத்தில் நாயாகியான பாக்ஸர் வீராங்கனை

நடிகர் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இதன் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பிக்பாஸ் சென்றாயனுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சென்றாயனின் வெகுளித்தனம் அனைவர் மனதையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே.

இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி

கடந்த 2016ஆம் ஆண்டு சிரிஷ், பாபிசிம்ஹா நடிப்பில் அனந்தகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் 'மெட்ரோ'. மெட்ரோ நகரங்களில் நிகழும் செயின் திருட்டு கதையம்சம் கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்த கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார்