வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ‘எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும் அவர் பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

மேலும் ’எங்களுக்கு ஹிந்தி தெரியும் என்பது எஸ்வி சேகருக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பிய முதல்வர், ‘அவர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும், அவர் அதிமுகவில் இருந்தபோது நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது அவர் எப்போதும் வந்ததே இல்லை என்றும் தெரிவித்தார்.

ஏதாவது கருத்து சொல்லிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்வி சேகருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா?

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை-28' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் 'சத்தம் போடாதே' 'சரோஜா' 'பந்தயம்' 'முத்திரை' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார்.

ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்வது எழுதப்படாத  விதி: கமல் பட நடிகையின் திடுக்கிடும் பேட்டி

பாலிவுட்டில் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்றும் அதனை நான் செய்யாததால் வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கமல் பட நடிகை

கொரோனா நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து!!! 8 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று

லெபனான்: இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய செவிலியின் அசாத்தியம்!!! வைரலாகும் புகைப்படம்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில்  நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் உலகமே அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

வாரிசு நடிகருக்கு ஜோடியாகும் 'ஓ மை கடவுளே' வாணிபோஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை வாணி போஜன், அதன் பின்னர் அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.