மாணவர்கள் போராட்டம் எதிரொலி: பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் பற்றிய சிறு நெருப்பு இன்று சென்னை மெரீனா வரை காட்டுத்தீயாக கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் தொடர் போராட்டம் கொடுத்த அழுத்தம் காரணமாக நாளை அதிமுக எம்பிக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளதாக சிலமணி நேரத்திற்கு முன்பாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி பாரத பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற பிரதமரை முதல்வர் வலியுறுத்துவார் என்றும் இதன் மூலம் இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மெரீனா போராட்டத்தில் திடீர் திருப்பம். 1 மணி நேரத்தில் முக்கிய மாற்றம்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வுடன் நேற்று முதல் தொடர் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு பல துறைகளை சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

ஜல்லிக்கட்டுக்காக 'சிங்கம் 3' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

சூர்யா நடிப்பில் உருவான 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'சி3' படம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு: பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் கடிதம்

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் விஷால் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக வெளிவந்த வதந்தியை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பீட்டாவுக்கும் ஆதரவு, ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவு. பிரபல பாடகி

தற்போது இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் மட்டுமின்றி பீட்டாவுக்கு எதிரான போராட்டமாகவும் உள்ளது. .

இளைஞர்களின் ஒற்றுமைக்கும், தைரியத்திற்கும் தலை வணங்குகிறேன். நயன்தாரா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இளைஞர்களின் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதுவரை பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர்.