'வலிமை' திரைப்படத்தை பார்த்து தான் முதல்வர் இந்த உத்தரவை பிறப்பித்தாரா?

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை எப்படி பிடிப்பது போன்ற காட்சிகள் மிகவும் தத்ரூபமாக படமாக்கப்பட்டது என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் இதுபோன்று உண்மையிலேயே போதைப்பொருள் கும்பல் இருக்கின்றதா? அவ்வாறு இருந்தால் இயக்குனர் எச்வினோத் அதை எப்படி தனது திரைக்கதையில் புகுத்தினார்? இதற்காக என்னென்ன கள ஆய்வு செய்தார் என்பது குறித்து அவரிடம் விசாரிக்க தனது டீமை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சமீபத்தில் தமிழகத்தில் ’கஞ்சா வேட்டை 2.0’ என்ற ஆபரேஷனை நடத்த தமிழக டிஜிபி உத்தரவிட்டார். இந்த உத்தரவும் ‘வலிமை’ படத்தின் அடிப்படையில்தான் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.