நிவர் புயலை எதிர்க்கொள்ள தயாராகும் தமிழக அரசு… மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே தமிழக அரசு பல்வேறு தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி வரும் 25 ஆம் தேதி தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. இந்த புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தற்போது விரைந்து எடுத்து வருகிறது.
அதற்காக 6 தேசிய பேரிடர் மீட்புபடைக் குழுவினர் அரக்கோணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் நிவர் புயல் மற்றும் கனமழை, அதீத மழையை எதிர்க்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஏரிகள், நீர் நிலைகளிலும் தற்போது அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறும் முதல்வர் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உறுதி செய்யப்பட்டு உள்ளது. மின் கம்பிகள் துண்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இத்தவிர பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மக்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை தமிழக அரசு வழங்கி இருக்கிறது. அதில், இடி மின்னல் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகள் நீர் தேங்குவதை வெளியேற்ற வேண்டும். பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து மண்டல அளவில் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்.
இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் டவர் சரியாக உள்ளதா என்பதை கண்காணித்து வைத்துக் கொள்ள வேண்டும். தேவையான உணவுகளை பொதுமக்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். புயல் கரைகளை கடக்கும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும். ஊடகங்கள் அளிக்கும் செய்தியை மட்டும் மக்கள் நம்பலாம். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம். கஜா புயல் போல் இந்த புயல் தாக்கும் நிலை தற்போது இல்லை என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout