'சர்கார்' பிரச்சனை குறித்து முதல்முறையாக கருத்து கூறிய முதல்வர் ஈபிஎஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'சர்கார்' குறித்து கிட்டத்தட்ட தமிழக அமைச்சர்கள் அனைவரும் விமர்சனம் செய்துவிட்டனர். இதனையடுத்து கொதித்தெழுந்த அதிமுகவினர் 'சர்கார்' திரையிட்டுள்ள திரையரங்குகளில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டவுடன் தற்போது 'சர்கார்' திரைப்படம் எந்தவித பிரச்சனையும் இன்றி திரையிடப்பட்டு வருகிறது,.
இந்த நிலையில் இதுவரை சர்கார்' திரைப்படம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்முறையாக இன்று கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
சர்கார் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம். கோடி கோடியாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி அந்த பணம் வந்தது? ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்' என்று முதல்வர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் உள்ள முதல்வர், இவ்வாறு கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments