பவன்கல்யாண் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீகாகுளம் என்ற பகுதியைச் சேர்ந்த 99 ஆந்திர மாநில மீனவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உணவு உறைவிடம் வழங்க வேண்டும் என்றும் பின்னர் அவர்களை பத்திரமாக சொந்த மாநிலத்திற்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன்கல்யாண் இன்று காலை கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு இது குறித்து அறிவித்து அந்த 99 மீனவர்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து பவன் கல்யாணுக்கு அவர் பதிலளிக்கையில் ’சென்னை துறைமுகத்தில் இருக்கும் 99 மீனவர்களின் நலன் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நாங்கள் அவர்களை பத்திரமாக பாதுகாப்போம், கவலை வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பவன் கல்யாணின் ஜனசேனை கட்சியின் சமூகவலைதளத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Dear @PawanKalyan ,
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) March 30, 2020
I have informed the concerned Department to act on it immediately. We will take care of them. Thank you! https://t.co/kL1dAiSySD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout