ராணுவ வீரரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதல்வர்
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எளிமையின் சின்னமாக இருப்பதாகவும் அவரிடம் சமூக வலைதளம் மூலம் ஒரு கோரிக்கை வைத்தால் உடனடியாக நிறைவேற்றபடுவதாகவும் ஏற்கனவே வெளிவந்த செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர் அதில் கூறியிருப்பதாவது: ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த டுவீட்டுக்கு உடனடியாக பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’தாய் நாட்டுக்காக போராடும் தங்களின் தாயாரின் உடல்நிலை குறித்து உடனடியாக கவனிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை அடுத்து உறுதி அளித்தபடி அவர் குறிப்பிட்ட முகவரிக்கு மருத்துவ ஊழியர்களை அனுப்பி அவருக்கு தேவையான பரிசோதனை செய்து, மருந்துகளும் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள அந்த ராணுவ வீரர், ‘நன்றி ஐயா... இப்படி ஒரு உதவியையும் ஆதரவையும் நான் எதிர்பார்க்கவே இல்லை. நன்றிகள் பல’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 22, 2020
மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்! https://t.co/m8P2jTvjm7 pic.twitter.com/CDr5zAqNCW