ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தைக்கு உதவி செய்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகவும் எளிமையானவர் என்றும் சாதாரணமானவர்கள் கூட மிக எளிதாக அவரை அணுகும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ரத்த புற்றுநோய் பாதித்த குழந்தை ஒன்றுக்கு தமிழக முதல்வர் உதவி செய்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

தென்காசியை சேர்ந்த குழந்தை ஒன்று ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை மூலம் மருந்துகள் பெற்று அந்த குழந்தைக்கு கொடுக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது மருந்து தீர்ந்து விட்டதால் இப்போது உள்ள சூழ்நிலையில் அந்த குழந்தைக்கு தேவையான மருந்துகளை சென்னைக்கு சென்று சிறுமியின் பெற்றோரால் வாங்க முடியவில்லை என்றும் எனவே தமிழக முதல்வர் இதில் தலையிட்டு அந்த குழந்தையின் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் சமூகவலைதளத்தில் ஒருவர் குழந்தையின் புகைப்படம் மற்றும் மருத்துவ குறிப்புகளுடன் ஒரு பதிவைப் செய்து அதனை முதல்வரின் டுவிட்டர் பக்கத்திற்கு டேக் செய்திருந்தார்.

இந்த பதிவை பார்த்து உடனடியாக பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இந்த குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம் பெற நலம் பெற வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த குழந்தைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரில் பதிவாகும் ஒவ்வொரு தகவலுக்கும் உடனடியாக பதிலளிப்பதோடு, தகுந்த நடவடிக்கையும் எடுத்து வரும் தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

அஜித், சிம்பு படங்களை பார்க்க வேண்டாம்: கெளதம் மேனன் வேண்டுகோள்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' மற்றும் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களையும் இந்த சூழ்நிலையில் பார்க்க வேண்டாம் என்று இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் வீடியோ ஒன்றில்

ஒரு வருட கொண்டாட்டம்: மனைவிக்கு மகத் கொடுத்த சிறப்பு பரிசு

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், நடிகை பிராய்ச்சி மிஸ்ராவை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் என்றும், இந்த திருமணத்தில் சிம்பு உள்பட

சினிமா தொழிலாளர்களுக்காக 3 லட்சம் கொடுத்த பிரபல நடிகை!

ஊரடங்கால் படப்பிடிப்பு இன்றி கஷ்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு பல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருவதை

'பால்கனி பையன்' என விமர்சித்த எச்.ராஜாவுக்கு கமல் கட்சியின் பதிலடி

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனை 'பால்கனி பையன்' என விமர்சனம் செய்திருந்தார். எச்.ராஜாவின் இந்த விமர்சனத்திற்கு

இந்த மாதிரி சூழ்நிலையிலும் வசூலா? வாழ்க இந்தியா: நடிகர் பாலசரவணன்

இந்தியாவில் இரண்டாம் கட்ட ஊரடங்கு மே மாதம் மூன்றாம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாளை முதல் ஒரு சில நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.