அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா-தினகரன் நீக்கம்: முதல்வர் பழனிச்சாமி அதிரடி
- IndiaGlitz, [Thursday,August 10 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்த நிலையில் சசிகலா அணி கடந்த சில மாதங்களாக மேலும் பிரிந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என உடைந்தது.
இந்த நிலையில் அதிமுகவின் இரு அணியும் இணைய தினகரன் கொடுத்த கெடு கடந்த 4ஆம் தேதியே முடிவடைந்த நிலையில் அதிமுகவின் புதிய நிர்வாகிகளை தினகரன் நியமனம் செய்தார்.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தினகரனின் ஆதிக்கத்தை அடக்க நடவடிக்கை எடுக்கப்படும் கட்டாயத்தில் இருந்த முதல்வர் பழனிச்சாமி சற்று முன் அதிமுக அம்மா அணியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரையும் அதிரடியாக நீக்கினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி வெகுவிரைவில் இணையவுள்ளதாகவும், ஓபிஎஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவியும், அவருடைய ஆதரவாளர் இருவருக்கு அமைச்சர் பதவியும் தர முதல்வர் சம்மதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது