தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது எப்போது? முதலமைச்சர் விளக்கம் 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உடன் தான் ஆலோசனை செய்ததாகவும் அந்த குழுவினர் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்த தங்கள் பரிந்துரைகளை விரைவில் மருத்துவ வல்லுநர்கள் முதல்வரிடம் அளிப்பார்கள் என்றும், அதன்பின்னர் பள்ளி, கல்லூரி திறக்கும் தேதி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சுறா மீன் தாக்கியதால் கையை இழந்த 12 வயது சிறுவன்! அதிர்ச்சி தகவல்

உக்ரைன் நாட்டில் சுறா மீன் தாக்கியதால் 12 வயது சிறுவன் கையை இழந்ததாகவும், கைடு ஒருவருக்கு கால் சேதமடைந்ததாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஷிவானிக்கு பதிலாக வைரலாகும் அவரது அம்மாவின் புகைப்படம்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன், நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் மௌனமாக இருந்தார். அதன் பின்னர் இரண்டாவது வாரம் முதல் ரம்யா, கேப்ரில்லா, சம்யுக்தா

மிரட்டல் விவகாரம்: சீனுராமசாமியின் முக்கிய கோரிக்கை!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இன்று காலை திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் அய்யா தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் பதிவு செய்திருந்தார்.

நிலமோசடி விவகாரம்: சூரியின் அடுத்தகட்ட நடவடிக்கை

சமீபத்தில் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ரமேஷ் குடவாலா மீது நில மோசடி புகார் கொடுத்தார் என்பதும்

தமிழக ரசிகருக்காக கடலூர் வருவாரா தல தோனி?

தமிழகத்தைச் சேர்ந்த தீவிரமான ரசிகர் ஒருவர் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறமாக மாற்றினார் என்றும், தனது வீட்டின் சுவரில் தோனியின் புகைப்படங்களை வரைந்தார்