ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவினர்களுடன் முக்கிய ஆலோசனை செய்யும் முதல்வர்!
- IndiaGlitz, [Thursday,April 30 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இன்னும் மூன்று நாட்கள் மட்டும் இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொலி மூலமாக ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். மருத்துவ குழுவினர்களுடனான இந்த ஆலோசனைக்குப் பின்னரே ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
தமிழகத்தில் சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்வு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து முதல்வரின் அறிவிப்பு வெளிவந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது