சேலத்து பாசம்: தமிழில் அறிவிப்பு செய்து முதல்வருக்காக விமானம் ஓட்டிய கேப்டன் கோபிநாத்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற தகவல் வந்து இருந்தும் தமிழக முதல்வருக்காக விமானம் ஓட்ட வந்த கேப்டன் கோபிநாத் அவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காகவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதாகவும் சமீபத்தில் சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் சேலத்திலிருந்து சென்னைக்கு தனியார் விமானத்தில் சென்னை திரும்ப முடிவு செய்தார். இந்த விமானத்தை கேப்டன் கோபிநாத் இயக்கினார்
முன்னதாக தமிழக முதல்வரை விமான நிலையத்தில் சந்தித்த கேப்டன் கோபிநாத், தாங்கள் பயணம் செய்யும் விமானத்தை இயக்குவது நான் தான் என்றும், இன்று எனக்கு குழந்தை பிறந்து இருக்கும் செய்தி அறிந்தும், நீங்கள் செல்லும் விமானத்தை இயக்க விருப்பப்பட்டு பணிக்கு வந்திருப்பதாகவும் அவர் முதல்வரிடம் தெரிவித்தார்
உடனே கோபிநாத் மற்றும் அவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தமிழக முதல்வர் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார். அப்போது அந்த விமானத்தை இயக்க ஆரம்பிக்கும் முன் கேப்டன் கோபிநாத் தமிழில் அறிவிப்பு செய்தார். இன்று தமிழக முதல்வர் அவர்கள் இந்த விமானத்தில் நம்முடன் பயணம் செய்கிறார் என்று அவர் தமிழில் அறிவித்த உடன் முதல்வரும் மற்ற பயணிகளும் ஆச்சரியம் அடைந்தனர்.
தமிழக முதல்வரின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் இந்த கேப்டன் கோபிநாத் என்பதும் இவர் அமெரிக்காவில் விமான பயிற்சி பெற்று பின்னர் சேலம் விமான பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
முதல்வர் மற்றும் கேப்டனின் சேலத்து பாசம் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout