பசியோடு அழும் சிறுமியின் வீடியோ: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது தாயார் தினந்தோறும் விதவிதமாக காய்கறிகளுடன் கூடிய குழம்பு வைத்து சோறு கொடுப்பார்கள் என்றும் ஆனால் தற்போது காசு இல்லாததால் தனது அம்மா சோறு குழம்பு எதுவும் கொடுக்கவில்லை என்றும் பட்டினியால் இருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாகவும் அந்த சிறுமி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ முதல்வரின் பார்வைக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அந்த குடும்பத்தினர் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும் என்றும் இதனை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வெகு விரைவில் அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டுவிட்டரில் பல விஷயங்கள் முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout