பசியோடு அழும் சிறுமியின் வீடியோ: உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தனது தாயார் தினந்தோறும் விதவிதமாக காய்கறிகளுடன் கூடிய குழம்பு வைத்து சோறு கொடுப்பார்கள் என்றும் ஆனால் தற்போது காசு இல்லாததால் தனது அம்மா சோறு குழம்பு எதுவும் கொடுக்கவில்லை என்றும் பட்டினியால் இருப்பதாகவும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாகவும் அந்த சிறுமி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ முதல்வரின் பார்வைக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அந்த குடும்பத்தினர் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும் என்றும் இதனை எனது கவனத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து வெகு விரைவில் அந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டுவிட்டரில் பல விஷயங்கள் முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்!!! எச்சரிக்கும் ஐரோப்பிய மருந்து நிறுவனம்!!!

கொரோனா சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸும் வௌவால்களும் பால்ய நண்பர்களா??? அறிவியல் என்ன சொல்கிறது???

கொரோனா வைரஸ் என்பது வௌவால்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. பல விலங்கு இனங்களில் கொரோனா வைரஸ் கிருமி காணப்படுகிறது.

அடுத்து வரும் மழைகாலம் இந்தியாவுக்கு பேராபத்தாக இருக்கும்!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!

கொரோனா பரவல் தடுப்புக்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்க்க உதவும் இந்திய ஐ.ஐ.டி நிறுவனங்கள்!!! தயாரிப்புகள் என்னென்ன ???

கொரோனாவை எதிர்கொள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது ரோபோக்கள், மென்பொருள்கள்

தமிழகத்தில் மேலும் 72 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தினந்தோறும் மாலையில் தெரிவித்து வரும் நிலையில்