'விஸ்வாசம்' குறித்து தமிழக முதல்வர் கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நெல்லையில் நடந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் 'விஸ்வாசம்' குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா நேற்று நெல்லையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக, தேமுதிக உள்பட பல கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த தொண்டர்களை வரவேற்று பேசினார்.
'அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம் என்றும், இந்த கட்சியில் உண்மையாக விஸ்வாசமாக பணிபுரிபவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும் என்றும் கூறினார். முதல்வர் 'விஸ்வாசம்' என்று வேறு அர்த்தத்தில் கூறினாலும் 'விஸ்வாசம்' என்ற வார்த்தையை அவர் உச்சரித்தவுடன் கூட்டத்தினர்களிடையே கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அஇஅதிமுக கட்சி ஆலமரம் போன்றது என்றும், அனைவரையும் வரவேற்று இடம் கொடுக்கும் ஜனநாயக கட்சி என்றும், திமுக போன்று வாரிசு அரசியலை கொண்ட கட்சி இல்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout