'விஸ்வாசம்' குறித்து தமிழக முதல்வர் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Monday,January 21 2019]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நெல்லையில் நடந்த பிரமாண்ட கூட்டம் ஒன்றில் 'விஸ்வாசம்' குறித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் விழா நேற்று நெல்லையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக, தேமுதிக உள்பட பல கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த தொண்டர்களை வரவேற்று பேசினார்.

'அதிமுக ஒரு ஜனநாயக இயக்கம் என்றும், இந்த கட்சியில் உண்மையாக விஸ்வாசமாக பணிபுரிபவர்களுக்கு பதவிகள் தானாக தேடி வரும் என்றும் கூறினார். முதல்வர் 'விஸ்வாசம்' என்று வேறு அர்த்தத்தில் கூறினாலும் 'விஸ்வாசம்' என்ற வார்த்தையை அவர் உச்சரித்தவுடன் கூட்டத்தினர்களிடையே கரகோஷம் விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஇஅதிமுக கட்சி ஆலமரம் போன்றது என்றும், அனைவரையும் வரவேற்று இடம் கொடுக்கும் ஜனநாயக கட்சி என்றும், திமுக போன்று வாரிசு அரசியலை கொண்ட கட்சி இல்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

 

More News

அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்'

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார், மீண்டும் விஜய்சேதுபதி நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வந்தார்

அஜித் ரசிகர்கள் தாமரையை மலர செய்வார்கள்: தமிழிசை நம்பிக்கை

திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணையும் விழாவில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்

தளபதி 63' படத்தின் பூஜை தொடங்கியது!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்

சிவகார்த்திகேயன் இயக்குனரின் அடுத்த படத்தில் கார்த்தி?

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் அடுத்ததாக 'மாநகரம்' இயககுனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்

இம்மாதம் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றுள்ளது.