டுவிட்டரில் விண்ணப்பித்தாலும் உதவி கிடைக்கும்: தமிழக முதல்வரின் செயல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்பெல்லாம் அரசிடம் இருந்து ஒரு உதவி தேவை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து அது அரசின் கவனத்திற்கு சென்று அதன்பின்னர் அரசு நடவடிக்கை எடுத்து அந்த உதவி விண்ணப்பதாரருக்கு சென்று சேர நீண்ட நாட்கள் ஆகும்.
ஆனால் தற்போது தமிழக முதல்வர் அவ்வப்போது பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக கொரோனா நேரத்தில் டுவிட்டரில் தேவையானவற்றை பதிவு செய்து முதல்வரின் டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்தால் உடனடியாக அந்த உதவி கிடைத்து வருகிறது.
உதாரணமாக இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்து பிழைத்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கே வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருவதாகவும், அரசும், அதிகாரிகளும் இதனைக் கவனமெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் டுவிட்டரில் முதல்வருக்கு விண்ணப்பம் வந்தது. உடனடியாக அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதாக முதல்வரிடம் இருந்து பதில் வந்தது.
எனவே தமிழக மக்கள் அவசர உதவி தேவை என்றால் உடனடியாக டுவிட்டரில் பதிவு செய்து அதனை முதல்வரின் டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்ய அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நன்றி! https://t.co/H16Oq9OCg3 pic.twitter.com/A48JakoF9p
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com