காது சவ்வு கிழிந்துவிடும்: மு.க.ஸ்டாலினை எச்சரித்த முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும், தாங்கள் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்று சொல்வதைவிட எதிர்க்கட்சியை குறை சொல்லியே பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிச்சாமி, 'நாங்கள் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும்போது, 'இந்த திட்டங்களை செய்கிறோம், அதை செய்கிறோம் என சொல்கிறோம். ஆனால் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும்போது என்னையும் பிரதமரையும் திட்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். மரியாதை கொடுத்து பேசினால்தான் அவருக்கும் மரியாதை கிடைக்கும். நான் திருப்பி பேசினால் காது சவ்வு கிழிந்துவிடும்' என்று முதல்வர் ஸ்டாலினை காட்டமாக விமர்சனம் செய்தார்.

மேலும் தான் சாதாரண தொண்டனாக இருந்து உழைத்து இந்த பதவிக்கு வந்துள்ளதாகவும், தந்தையின் ஆதரவில் கொள்ளைப் புறம் வழியாக ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததாகவும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் கூலிப்படை தலைவன் போன்று செயல்படுவதாகவும், அவரை போன்றே அவரது தொண்டர்களும் இருப்பதாகவும் விமர்சித்தார்.

மேலும் இந்தியாவிலேயே ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்கும் ஒரே கட்சி திமுக என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் நிர்வாகிகள் ஒழுங்காக இருந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என விமர்சித்தார். முதல்வரின் இந்த காரசாரமான பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில்

விஷாலின் 'அயோக்யா' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்

விஷால் நடித்து முடித்துள்ள 'அயோக்யா' திரைப்படம் ஏற்கனவே ஒருசில ரிலீஸ் தேதிகளை அறிவித்திருந்தபோதிலும் ஒருசில காரணங்களால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போனது.

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

கடந்த ஒரு மாதமாக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் நாட்டையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் கழுத்தறுபட்டு கொலை

சென்னை போட்டி முடிந்த பின்னர் 10 கிலோ குப்பை: சுரேஷ் ரெய்னாவின் டுவிட்

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ராகுல்காந்திக்கு எதிராக போட்டியிட்டவரின் வேட்புமனு நிராகரிப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே அமேதி தொகுதியில் போட்டியிடும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து,