ரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ரஜினிகாந்த் அவர்களின் இந்த பேட்டி குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியபோது, ‘எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும், ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்றும், 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்றும், 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் கூறினார்.

பொதுவாக ரஜினிகாந்த் பேட்டி அளித்தால் அவரது கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் மட்டுமே பதிலடி கொடுப்பார்கள். ஆனால் இம்முறை முதல்வர் உடனடியாக ரியாக்சன் செய்ததை அரசியல் விமர்சர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
 

More News

ஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்

கோல்டன் ஐகான் விருதை பெற்று இன்று சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, '2021 ஆம் ஆண்டு நடைபெறும்

யார் முதல்வர் வேட்பாளர்? பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால்,

காதலில் வெற்றி பெற விஷம் குடித்த வாலிபர்: அதிர்ச்சியில் மனைவி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வேறு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர்.

நான் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? ரஜினி கமல் குறித்து சினிமா பிரபலம் 

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது நிலையில் இருவரும் இணைந்தால்

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் 'குருதிப்புனல்' கனெக்சன்

கமல்ஹாசன், அர்ஜூன், கவுதமி நடிப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் 'குருதிப்புனல் இந்த படத்திற்கு கோவிந்த் நிஹாலனி கதையும் கமல்ஹாசன் திரைக்கதையும் எழுத