கொரோனாவால் மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு அரசு வேலை: முதல்வர் அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பாலமுரளி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தி அறிந்ததும், சென்னை காவல் ஆணையர் கேகே விசுவநாதன் அவர்கள் தனது சொந்த செலவில் ரூ.2.25 லட்சத்திற்கு மருந்து வாங்கி கொடுத்தும் சிகிச்சை பலனின்றி பால முரளி மரணம் அடைந்திருப்பது காவல்துறையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி அவர்களின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவருடைய குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் பலனின்றி பலியாகி இன்ஸ்பெக்டர் பாலமுரளி பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பாலமுரளி குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த பாலமுரளி அவர்களுக்கு மனைவியும் எட்டாம் வகுப்பு படிக்கும் மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர் என்பதும் பாலமுரளியின் தந்தையும் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது முக்கிய பதவியில் உள்ளவர்களும்

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது. அதற்கு எதிராக இந்தியா தனது

தமிழகத்தில் முதல்முறையாக 2000ஐ கடந்த கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினந்தோறும் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில்

வருகிற ஜுன் 21 அன்று உலகம் அழியப்போகிறதா??? இணையத்தில் உலவும் பரபரப்பு செய்திகள்!!!

தற்போது, நாசா விஞ்ஞானிகளே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு நமது சமூக வலைத் தளங்களில் ஒரு பரபரப்பு செய்தி உலவிக்கொண்டு இருக்கிறது.

கொரோனாவுக்கு நடுவில் களைகட்டும் சில விளையாட்டுப் போட்டிகள்!!! புதிய விதிமுறைகள்!!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒருதுறையாக விளையாட்டும் இருந்து வருகிறது.