விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி- அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
- IndiaGlitz, [Friday,February 12 2021]
பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். தமிழக விவசாயிகள் இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், விவசாயிகள் பயன் அடையும் வகையில் அவர்களின் நிலங்களில் பயன்படுத்தம் பம்பு செட்களுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பின் மூலம் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் விளக்கம் அளித்தார். தமிழகம் நீர் மற்றும் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று இருப்பதை எண்ணி பெருமை கொள்கிறேன் என்றும் அவர் மக்கள் முன் உற்சாகமாக உரையாடினார். அதோடு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தின் மூலம் இதுவரை 6,011 ஏரிகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும் என்றும் நம்பிக்கை அளித்தார்.