ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே கூறிய தமிழக முதலமைச்சர்! என்ன ஒரு ஒற்றுமை!

  • IndiaGlitz, [Tuesday,February 11 2020]

சூர்யா ஆர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய ’காப்பான்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆர்யாவின் வசனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அப்படியே கூறியிருப்பது பெரும் ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது

இந்தப்படத்தில் பிரதமராக நடித்திருக்கும் ஆர்யா ஒரு காட்சியில், ‘காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கின்றேன்’என்றும், இனிமேல் விவசாயத்தை தவிர இந்த நிலத்தில் வேறு எதற்கும் அனுமதி கிடையாது என்றும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிடுவார்.

இதே அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தகக்து. காப்பான் படத்தில் ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே முதல்வர் பழனிச்சாமி அவர்களும் கூறியது எதேச்சையான ஒரு நிகழ்வாக இருந்தாலும் பெரும் ஆச்சரியத்துடன் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘காப்பான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வெட்டுக்கிளி காட்சிகள் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் உண்மையாகவே நடந்து வருகிறது என்பது தெரிந்ததே

More News

'விஸ்வாசம்' காட்சியை விளம்பரத்திற்கு பயன்படுத்திய தமிழக காவல்துறை!

தல அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியான 'விஸ்வாசம்' என்பது அனைவரும் அறிந்ததே

மீண்டும் டெல்லியில் ஆட்சியை அமைக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது.

'நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சுடலாமா'? விஜய் கேள்வியால் பரபரப்பு

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் நெய்வேலி படப்பிடிப்பு முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது

தனுஷின் 'பா.பாண்டி 2' படத்தில் கவுண்டமணி?

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் தனுஷ் கடந்த 2017-ம் ஆண்டு 'பா.பாண்டி' என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் மாறினார்.

டெல்லித் தேர்தல் முடிவு: ட்விட்டரில் அதிர வைத்த குஷ்பு

டெல்லி சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் படு தோல்வியைத் தழுவியிருக்கிறது.