ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே கூறிய தமிழக முதலமைச்சர்! என்ன ஒரு ஒற்றுமை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா ஆர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கிய ’காப்பான்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆர்யாவின் வசனத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அப்படியே கூறியிருப்பது பெரும் ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது
இந்தப்படத்தில் பிரதமராக நடித்திருக்கும் ஆர்யா ஒரு காட்சியில், ‘காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கின்றேன்’என்றும், இனிமேல் விவசாயத்தை தவிர இந்த நிலத்தில் வேறு எதற்கும் அனுமதி கிடையாது என்றும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிடுவார்.
இதே அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தகக்து. காப்பான் படத்தில் ஆர்யா கூறிய வசனத்தை அப்படியே முதல்வர் பழனிச்சாமி அவர்களும் கூறியது எதேச்சையான ஒரு நிகழ்வாக இருந்தாலும் பெரும் ஆச்சரியத்துடன் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ‘காப்பான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வெட்டுக்கிளி காட்சிகள் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் உண்மையாகவே நடந்து வருகிறது என்பது தெரிந்ததே
• Tamil Nadu government decides to declare #CauveryDelta Region as protected special agricultural zone. @CMOTamilNadu ??@anavenkat Sir ???? #Kaappaan !@arya_offl ?? @KiranDrk@Suriya_offl | @LycaProductions pic.twitter.com/a9GxaijiLQ
— ATCHAYA KUMAR???? ~2.0~ (@ammusuriya13201) February 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com