விடுமுறை மாதமாக மாறும் ஜனவரி: மேலும் ஒருநாள் விடுமுறை என அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மதரீதியில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்பட பல பண்டிகைகளுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பொது விடுமுறை நாளாக தமிழக முதல்வர் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருநாள் தினத்தை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தைப்பூசத் திருவிழாவுக்கும் பொது விடுமுறை என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதற்கு முருக பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த ஆண்டு முதல் கூடுதலாக ஒரு பொது விடுமுறை நாள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே ஜனவரியில் புத்தாண்டு, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், குடியரசு தினம் என அதிக விடுமுறை தினங்கள் இருக்கும் மாதமாக உள்ள நிலையில் தற்போது தைப்பூசம் என்னும் மேலும் ஒருநாள் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout