முதல்வர் ஸ்டாலின் போட்ட முத்தான மூன்று கையெழுத்துக்கள்!

தமிழக முதலமைச்சராக இன்று காலை முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமை செயலகத்துக்கு வந்து முதல்வர் பணியை தொடங்கினார். 

முதல் முதலாக அவர் மூன்று முத்தான திட்டங்களில் கையெழுத்திட்டு உள்ளார். முதலாவதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக மே மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதனை அடுத்து ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் நாளை முதல் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற கோப்பிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பின் மூன்று முத்தான திட்டங்களில் கையெழுத்திட்டதை அடுத்து பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.