தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் இம்மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி, 12ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி ஆகிய ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது தளர்வுகள் வழங்குவதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வருகிற 29ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோடிக்கணக்கானோர் வேலையின்றி, வருமானமின்றி சிக்கலில் உள்ளனர். மேலும் பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லை என்பதால் பலர் தங்களுடைய சொந்த ஊருக்கும், சொந்த ஊரில் இருந்து வேலை செய்யும் நகரத்திற்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் நேற்று சுமார் 7000 பேர்களுக்கும், மொத்தம் இரண்டு லட்சம் பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு குறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்கும் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments