மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா விருது'. தமிழக அமைச்சரவை தீர்மானம்
- IndiaGlitz, [Sunday,December 11 2016]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழக அமைச்சரவை நேற்று முதன்முதலாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் ஒருசில தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:
1. ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பது.
2. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது
3. பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது.
4. முன்னாள் முதல்வர் நல்லடக்கம் செய்த அதே இடத்தில் ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைப்பது.
5. பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் என்பதை பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா செல்வி ஜெ ஜெயலலிதா நினைவிடம் என்று பெயர் மாற்றம் செய்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் அமைச்சரவையில் இயற்றப்பட்டது.