மார்ச் 31வரை திரையரங்குகளை மூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

சீனா, இத்தாலி உள்பட உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் 100 இந்தியர்களுக்கு பரவிவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழக எல்லையோர மாவட்ட திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை 31ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், 15 நாட்களுக்கு பொது இடங்களில் கூட வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல் பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதை 15 நாட்கள் தவிர்க்கவும் என்றும், அவ்வப்போது கைகளை சோப்பு போட்டு கழுவுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், எல்.கே.ஜி. முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை என்றும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'ஜானு' தோல்வியை விமர்சனம் செய்தவர்களுக்கு சமந்தாவின் பதிலடி

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படம் '96'. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார்

சிவகார்த்திகேயன், அனிருத்தை நம்பித்தான் இருக்கின்றேன்: நயன்தாரா பட இயக்குனர்

நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் வசூலிலும் சாதனை செய்தது

கொரோனா வைரஸால் தள்ளி போன பிரபல நடிகையின் திருமணம்!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாள்களாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக பிரபல மலையாள நடிகை உத்தரா உன்னி என்பவரின் திருமணம் தள்ளிப் போயுள்ளது 

'விக்ரம் வேதா' இயக்குனர்களின் அடுத்த படத்தில் பார்த்திபன்

கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி  இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

கொரோனா எதிரொலி: சென்னையில் 500 கிலோ சிக்கன் பக்கோடா இலவசம்

சென்னை ஆலந்தூரில் இலவசமாக 500 கிலோ சிக்கன் பக்கோடா வழங்கப்பட்டன என்பதும் இதனை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது என்பதும் குறிப்பிடத்தக்கது.